Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் பதவி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? துரைமுருகன் பதில்..!

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:46 IST)
இன்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது துணை முதல்வர் பதவி உங்களுக்கு கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்

. தமிழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் விரைவில் ஊருக்கு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலூரில் இன்று அமைச்சர் துரைமுருகன் வருகை தந்த போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது திமுக வயல் நீங்கள் தான் மிகவும் சீனியர் அமைச்சர் எனவே உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதுதான் நியாயம் அந்த துணை முதல்வர்  பதவி   உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள் என்று கூறிய பின்னர் இதெல்லாம் தலைவர் முடிவெடுக்க வேண்டிய விஷயம் தலைவர் மற்றும் அமைச்சர்களை கலந்து பேசி யாருக்கு துணை முதல்வர் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை முடிவு செய்வார் என்று கூறினார்.
 
துணை முதல் பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அமெரிக்க விமானம் புறப்பட்டதுமே தீ.. கீழே குதித்த பயணிகள்! - அதிர்ச்சி வீடியோ!

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments