Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி

Advertiesment
மெரினா
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (20:14 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் அது பிச்சை என்று கூறலாம். ஆனால் நீங்கள்தான் இடத்தை ஒதுக்கவே இல்லையே. நீதிமன்றத்தின் ஆணையினால் தானே கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைத்தது.

webdunia
மேலும் ஒரு அமைச்சருக்கான தகுதி, கண்ணியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்று துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச நடனம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு : உயர் நீதிமன்ற மதுரை கிளை