கடந்த தேர்தலில் மதிமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துரை வைகோ இது குறித்து கூறிய போது கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்தது, ஆனால் இந்த முறை மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.
திமுக தலைமையிடம் நாங்கள் எங்களுடைய தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் எங்கள் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த முறை அனைத்து கூட்டணி கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.