Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செய்து கொண்டிருந்த ஒரே தொழிலை விட்டுட்டேன்: துரை வைகோ

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:35 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட இருக்கும் வைகோ மகன் துரை வைகோ நான் செய்து கொண்டிருந்த ஒரே தொழிலை அரசியலுக்கு விட்டு விட்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஐடிசி சிகரெட் விநியோகிஸ்தர் பிசினஸ் செய்து கொண்டிருப்பது குறித்த கேள்வி கேட்ட நிலையில் அவர் அதற்கு பதில் அளித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் சிகரெட் விநியோகிஸ்தராக இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் புகை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தொழில் செய்து கொண்டிருப்பது குறித்து சிலர் சுட்டிக்காட்டியதும் நான் அந்த தொழிலை விட்டு விட்டேன் என்றும் நான் அந்த ஒரே ஒரு தொழிலை மட்டுமே செய்து கொண்டிருந்த நிலையில் அதையும் அரசியலுக்கு விட்டு விட்டேன் என்றும் அந்த தொழிலை நான் விட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

நான் செய்தது தவறு தான் ஆனால் அதே நேரத்தில் அந்த தவறை சுட்டிக்காட்டியுடன் நிறுத்தி விட்டேன் என்றும் அரசியலுக்கு நானும் என் தந்தையும் என் குடும்பமும் இழந்தது மிக அதிகம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments