Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்த- துரை வைகோ!

J.Durai
திங்கள், 25 மார்ச் 2024 (14:57 IST)
ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார்.
 
இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்:
 
நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்  கவலைக்கிடமாக உள்ளார் எனவும் தெரிவித்தார். 
 
உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது என்றார். 
 
24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். 
 
இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும் என்றார். 
 
சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும்,    வயிற்று சுத்தம் செய்து கொண்டு வரப்பட்டும் , ரத்தத்தில் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய படைத்தலைவர் குண்டு வைத்து கொலை! உக்ரைன் காரணமா? - ரஷ்யாவில் பரபரப்பு!

நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில்.. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. பிடிவாரண்ட் பிறப்பித்ததால் உடனடி நடவடிக்கை..!

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments