சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகல் மழை வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி சில காய்கறிகளின் விலை ரூ.30 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.20க்கு விற்று வந்த கத்தரிக்காய் தற்போது ரூ.50க்கும், ரூ.15க்கு விற்று வந்த வெண்டைக்காய் ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் இந்த விலையேற்றம் அடுத்த 2 வாரங்களுக்கு தொடரலாம் என கூறப்படுகிறது. இந்த விலையேற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.