Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகன்களுக்கு பெயரிட்டதன் காரணம்: விளக்கிய கலைஞர்

மகன்களுக்கு பெயரிட்டதன் காரணம்: விளக்கிய கலைஞர்
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சியொன்றில் தனது மகன்களுக்கு பெயரிட்டதன் காரணம் குறித்து விளக்கியிருந்தார். தனது மகன்களுக்கு ஸ்டாலின்,  அழகிரி என ஏன் பெயர் வைத்தார் என்பதின் பின்னணியில் உள்ள காரணத்தை அவரே விளக்கியுள்ளார்.
 
கருணாநிதியின் தந்தையான முத்துவேலருக்கு 3 மனைவிகள். அவரது முதல் மனைவி குஞ்சம்மாள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.  இதையடுத்து, குஞ்சம்மாளின் தங்கை வேதம்மாளை கருணாநிதி
திருமணம் செய்தார். அவரும் விரைவிலேயே மரணமடைந்தார். இதனால் முத்துவேலர்  மூன்றாவதாக அஞ்சுகம் என்பவரை மணந்தார். முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். அதில் மூத்தவர் சண்முகசுந்தரம்மாள்,  அடுத்து பெரியநாயகி, 3ஆவது குழந்தைதான் கருணாநிதி ஆவார்.
 
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி இளம் வயதிலேயே காலமானார். முதல் மனைவிக்குப் பிறந்தவர் மு.க.முத்து. இதையடுத்து கருணாநிதி, 2வதாக தயாளு அம்மாளை மணந்தார். அவருக்கு 4 குழந்தைகள், அவர்கள் மு.க.அழகிரி, செல்வி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு. பின்னர், 3வதாக அவர் ராஜாத்தி  அம்மாளை திருமணம் செய்து ஒரு மகள் பிறந்தார். அவர்தான் கனிமொழி.
 
பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலைஞர் கூறியது, எனது குழந்தைகளுக்கு பெயர் வைப்பதிலும் எனது உணர்வுகளை  வெளிப்படுத்தியுள்னேன். வீட்டுக்காக ஒரு பெயர் முத்து - தந்தையார் முத்துவேலர் நினைவாக வைத்தேன். நாட்டுக்காக ஒரு பெயர் அழகிரி - பட்டுக்கோட்டை அழகிரி நினைவாக வைத்தேன். உலகிற்காக ஒரு பெயர் ஸ்டாலின் - ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் நினைவாக வைத்தேன் என்று கூறியிருந்தார்  கருணாநிதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுக்கடங்காத கூட்டம் - தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்