நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு....

J.Durai
புதன், 16 அக்டோபர் 2024 (09:22 IST)
திருவள்ளூர் மாவட்டம்  செங்குன்றம், சோழவரம், சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் சோழவரம் 30செமீ, செங்குன்றம் 28செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.
 
புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
 
தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு உயர தொடங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments