Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் இருந்த வாலிபர் சராமாரியாக வெட்டிக் கொலை - தப்பிய மர்ம கும்பல்

மதுபோதையில் இருந்த வாலிபர் சராமாரியாக வெட்டிக் கொலை - தப்பிய மர்ம கும்பல்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (05:39 IST)
கோவையில் மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று சராமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கோவை கிருஷ்ணராஜ் காலனியில் வசித்துவரும் பெயிண்டர் ஹக்கீம் (27).  அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் ஹக்கீம் மது குடித்துள்ளார். பின்னர், இரவு 11 மணி அளவில் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
 
இதனையடுத்து, 3 பேரும் சேர்ந்து ஹக்கீம் வீட்டு முன்பு நின்று பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஹக்கீமை சரமாரியாக தாக்கியது.

மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளது. அங்கிருந்த அவரது நண்பர்கள் அந்த கும்பலை தடுத்துப் பார்த்தும் பயன் அளிக்கவில்லை. பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் ஹக்கீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரும்! பிரேதப் பரிசோதனையும்!