பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (30). பெயிண்டராக வேலை பார்த்துவந்த அவர் கடந்த ஆண்டு தனது குழந்தையை கொலை செய்த வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில்தான் வெளியே வந்தார்.
மதுவுக்கு அடிமையான அவர் நேற்று வழக்கம்போல போதையில் வந்தவர் நாகல்கேணி அண்ணாசாலை சற்குணம் சாலையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கீழே இறங்கும்படி கூச்சலிட்டனர். ஆனால் தனை கண்டுகொள்ளாத சங்கர் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின்கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி சங்கரை டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே இறக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.