Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சுற்றுப்பயணம் எதிரொலி: திருவாரூரில் ட்ரோன்கள் பறக்க தடை..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (13:17 IST)
திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அம்மாவட்டத்தில் வரும் 22 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை அடுத்து இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் இருந்து நாளை திருச்சி செல்லும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதனை அடுத்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. 
 
முதல்வரின் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரான கதிர் ஆனந்த் எம்பி..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

திருப்பூரில் மட்டும் 98 வங்கதேசத்தினர் கைது.. இன்னும் தொடரும் தேடுதல் வேட்டை..!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிட தடை.. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!

சீனாவின் Deepseek AI நிறுவனத்தின் அபார வளர்ச்சி.. அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்