இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அதன் பின் ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு கையெழுத்து போடுவார்? என முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நிகழும் தற்கொலைகள் பற்றிய ஆளுநர் ரவிக்கு தெரியவில்லையா? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் அந்த சட்டத்திற்கு கையெழுத்து போடுவார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு வரி விதித்து இருப்பது கொடுமையான விஷயம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.