ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சென்னையில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் இந்த ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலை நந்தனம் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த திட்டத்தின்படி ஓட்டுனர் இல்லாமல் மூன்று பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கூறியபோது இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயிலில் ஓட்டுனர் இல்லாத ரயில் இயக்கப்படும் என்றும் ஓட்டுநர் இல்லாத ரயிலின் சோதனை இயக்கம் விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சென்னையில் முதன்முதலாக ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கப்பட இருப்பதை அடுத்து பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.