Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்: தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் தொடரும்...

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (19:24 IST)
இப்போரட்டம் நிலத்தடி நீரை எடுக்க கட்டுப்பாடு விதித்து, நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததால் அதனை நீக்க வலியுறுத்தி கேன் உற்பத்தியாளர்கள் போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று தொடங்கிய போராட்டம் தொடங்கிய நிலையில் இன்று  வேலை நிறுத்தம் வாபஸ்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலத்தடி பொதுப்பணித்துறை செயலர்  பிரபாகரன் தலைமையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கேன் உற்பத்தியாளர்கள் கோரிக்க்கைகள் குறித்து பரிசீலுத்து பதிலளிப்பதாக அரசு கூறியுள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக இப்போராட்டத்தை திருப்பபெறுவதாகவும் கூறப்படுகிறது.
 
'இன்று பலகட்டங்களாக கேன் உற்பத்தியாளர்கள் ,தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தயில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
 
வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு  இது குறித்து நடைபெறும் பேச்சு வார்த்தையில் விரிவான அறிக்கை தர உள்ளோம் எனவும் குறியுள்ளனர்.
 
தமிழக அரசு உத்தரவிடிருந்தபடி குடிநீர் ஆலையை மூடக்கூடாது என்ற கோரிக்கையை  பிரதானமாக வைத்து இப்போராட்டம் தொடங்கப்பட்டது என சென்னை கிரேட்டர் தமிழநாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தலைவர் முரளி பேட்டியளித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது:
 
நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்காமல் பேச்சு வார்ததை நடத்திவிட்டு என்ன பயன்?என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்தால்தால்தான் இப்போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மேலும் ’நிலத்தடி நீரை எடுக்க அனுமதி தந்தால் உடனடியாக வேலிநிறுத்தம் வாபஸ்பெறுவோம் என நிஜலிங்கம் கூறியிருக்கிறார்.’
 
குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டதால் சென்னையில் தண்ணீருக்காக மக்கள் திண்ணாடும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments