Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிநீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு...மக்கள் அதிர்ச்சி !

Advertiesment
குடிநீர் உரிமையாளர்கள்
குடிநீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு...

இன்று மாலை முதல் குடிநீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக குடிநீர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும்  ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உரிமையாளர்கள் இன்று மாலை ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.
 
பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கூறியதாவது :
 
நீதிமன்றத்தின் உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நீரையும் ஒருசேர பார்க்கக்கூடாது.எனவே இன்று மாலை குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியல்மி Extra Days: ஸ்மார்ட்போன்(ஸ்) மீது எதிர்பாரா விலை குறைப்பு!!