தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பெரிய கோவிலிலும் இந்த கட்டுப்பாடு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாட்டுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டை அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீன்ஸ் உட்பட மாடர்ன் டிரஸ் அணிய அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதால் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பை பின் தொடர அறிவுறுத்தப்படுகிறது.