Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனு சாஸ்திரத்தையே எரிச்சோம்.. போராட்டத்துக்கு வராமலா! – விசிகவுக்கு திக ஆதரவு!

Advertiesment
மனு சாஸ்திரத்தையே எரிச்சோம்.. போராட்டத்துக்கு வராமலா! – விசிகவுக்கு திக ஆதரவு!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (14:10 IST)
நாளை மனுதர்ம சாஸ்திரத்தை தடை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திராவிடர் கழகம் தலைவர் கொளத்தூர் மணி விசிக நடத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை தடை செய்ய கோரிய போராட்டத்தில் திகவும் ஆதரவு அளித்து போராடும் என தெரிவித்துள்ளார்.

முந்தைய காலங்களில் திராவிடர் கழக போராட்டங்களில் மனுதர்ம சாஸ்திரத்தை எரித்துள்ளதாக கூறியுள்ள அவர், தற்போதைய காலத்தில் மனுவை தடை செய்ய வேண்டியதன் தேவை உணர்ந்து விசிகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸப் மெசேஸ் அலப்பரை தாங்க முடியலயா? – உங்களுக்காகதான் இந்த அப்டேட்!