Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்" - ஜி.கே.மணி

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (19:12 IST)
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது 
 
ஏற்கனவே பாஜக முதல்வர் வேட்பாளரை தனியாக அறிவிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான பாமகவும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டாக்டர் ராமதாஸ் அவர்கள் அறிவிப்பார் என்றும் ஜிகே மணி தெரிவித்துள்ளார்
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ராம்தாஸ் தான் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி குறித்து அவர் கூறியபோது தேர்தல் நேரத்தில் ரஜினி திடீரென மன மாற்றம் அடையலாம் என்றும் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments