Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய செயலாளர் தகவல்

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (18:16 IST)
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில பாஜக தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றும் அந்த வேட்பாளரை பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்றும் கூறிவருகின்றனர் 
 
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதையும் பாஜகவினர் மறுத்து வருவதோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி இருப்பது போலவே தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தொடரும் என்றும் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னைக்கு வருகை தந்த பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி அவர்களிடம் செய்தியாளர்களிடம் ’தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன் இல்லை என்று அவர் உறுதி செய்தார் 
 
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இணைந்து முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து உள்ளார் என்பது தெரிய வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments