Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபி சிங் வழியில் தொடர்ந்து போராடுவோம்: டாக்டர் ராமதாஸ்

விபி சிங் வழியில் தொடர்ந்து போராடுவோம்: டாக்டர் ராமதாஸ்
, வெள்ளி, 25 ஜூன் 2021 (20:41 IST)
இட ஒதுக்கீடு விஷயத்தில் முன்னாள் பிரதமர் விபி சிங் வழியில் தொடர்ந்து போராடுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய  27% ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு அத்தியாயத்துக்கு  சொந்தக்காரரான சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 90-ஆவது பிறந்தநாள் இன்று. என் மனம் கவர்ந்த தலைவருக்கு என் மரியாதைகள்!(1/7)
 
27% இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள்  பயனடைந்தார்கள். ஆனால், அதற்காக வி.பி.சிங் கொடுத்த விலை மிகவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் சிறிதும் கலங்கவில்லை; வருந்தவில்லை. மாறாக  தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அப்படியே ஏற்றுக் கொண்டார்
 
’மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன
 
இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை (GOAL) அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும்
 
ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகி விட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்’’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறியவர் வி.பி. சிங் அவர்கள்
 
இந்தியாவில் சமூகநீதி தழைத்திருக்கும் வரை சமூகநீதியை விரும்பும் அனைவரின் மனங்களிலும் சிம்மாசனம் அமைத்து வீற்றிருப்பார் வி.பி. சிங்.
 
அவரது வழியில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்த பா.ம.க., மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பிலும் வென்றெடுக்க தொடர்ந்து போராடும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இன்றைய கொரோனா நிலவரம்!