Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்-ரஜினிக்கு டாக்டர் ராம்தாஸ் சவால்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (07:26 IST)
பாமக இளைஞரணி தலைவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தயாரா? என டாக்டர் ராம்தாஸ் சவால் விடுத்துள்ளார். சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்ற பாமகவின் 30வது ஆண்டு விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
 
பா.ம.க. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. எங்களுக்கு கட்சி கொள்கைகள் தான் முக்கியம். இன்றைக்கு தமிழகத்தில் ஊழல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. சட்டப்பூர்வமாக ஊழல்களை அங்கீகரிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. அதேநேரத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க வருங்காலத்தில் மக்கள் ஆசைப்பட மாட்டார்கள். அரசியல்வாதிகள் யாரும் கொடுக்கவும் மாட்டார்கள். தமிழகத்திற்கு பா.ம.க.வை தவிர வேறு மாற்று கிடையாது.
 
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி விட்டார். ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்காமல் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே மேடையில் அரசியல் ரீதியாகவும், தமிழக மக்கள் பிரச்சினைகளை தீர்வு காண்பது குறித்தும் அன்புமணி ராமதாசிடம் விவாதிக்க தயாரா?. அவ்வாறு அவர்கள் விவாதம் நடத்தினால் தமிழகத்தை டாக்டர் அன்புமணி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர்களே சொல்வார்கள். விவாதம் என்பது நல்ல ஆரோக்கியமான செயல். இதுபோன்ற விவாதத்திற்கான ஏற்பாடுகளை ஊடகங்கள் செய்ய வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் ராம்தாஸ் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments