Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர்களுக்கு இது மிகப்பெரிய அநீதி: டாக்டர் ராமதாஸ்..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (17:10 IST)
தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தடுப்பது அநீதி என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றியவர்களுக்கு  மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக 14 பேராசிரியர்களிடமிருந்து 25.04.2019ல் விண்ணப்பம் பெற்று 4 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை!
 
உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாதது நியாயமல்ல. இதில் செய்யப்படும் தாமதத்தால் கடந்த 4 ஆண்டுகளில் 10 பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்று விட்டனர்!
 
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்றைய நிலையில் ஒரு மூத்த பேராசிரியர் கூட  இல்லை. மூத்த பேராசிரியர் என்பது கிடைப்பதற்கரிய பெருமை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.  தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது அநீதி!
 
7 பேர் கொண்ட தேர்வுகுழுவுக்கு மாநில அரசின் பேராளர் நியமிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக பேராளரை  நியமித்து, மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments