முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்: ஜெயக்குமார் கேள்வி

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (16:43 IST)
தமிழக முதல்வர் ஏன் சேலத்தில் ஆய்வு நடத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் பணம் செல்லும் வழியை அடைத்து விடாதீர்கள் என்றும் திமுகவினர் பணம் கொண்டு செல்வதை தடுக்காதீர்கள் என்றும் அதிகாரிகளிடம் சொல்லப்படுகிறது. இதனால்தான் சேலத்தில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் என்ற நாடகத்தை நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 
 
மேலும் இதுவரை 35 கோடி ரூபாய் இளங்கோவன்  செலவு செய்து உள்ளார் என்றும் கொள்ளை அடித்த படத்தை வாரி இறக்கின்றனர் என்றும் திருமங்கலம் ஃபார்முலாவை விட ஈரோடு கிழக்கில் புது பார்முலாவை திமுக பின்பற்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் ஒரே நாளில் ஒன்பது கொலைகள் நடக்கிறது என்றும் காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments