இது நியாயமற்றது:திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (22:11 IST)
அனைத்து அரசு நூலகங்களிலும் முரசொலி தினகரன் குங்குமம் உள்ளிட்ட நாளிதழ்களை வாங்க வேண்டும் என தமிழக அரசு மறைமுகமாக உத்தரவிட்டு இருப்பது குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
 
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும்,  அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments