Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

Mahendran

, வியாழன், 2 ஜனவரி 2025 (13:28 IST)
தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பா.மக. இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் என திட்டவட்டமாக அறிவித்தார்.முகுந்தனை இளைஞர் அணி தலைவராக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தது தொடரும். அவர் இளைஞரணி தலைவராகவே இருப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. 
 
பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கி விட்டேன். அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. இது பேசி சரியாகி விட்டது. பா.ம.க. பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்.
 
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. மக்களை கேட்டால் முதலமைச்சரின் திறமையின்மையையே சொல்வார்கள். புலனாய்வு அதிகாரிகள் முதலமைச்சருக்கு சொல்வார்கள். இதற்கு முதலமைச்சர் திறமை இன்மையாக இருக்குமோ. இவரும் இவரது மகனை துணை முதலமைச்சராக்கி உள்ளார்.
 
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக போற்றப்பட்டது. இப்போது முற்றிலுமாக முடங்கி விட்டது. திறமையான அதிகாரிகள் பலரும் இருக்கிறார்கள்.வேங்கை வயலில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. அரசு மது கடையில் அருந்திய மதுவில் சயனைடு கலந்துள்ளது என சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் 1½ ஆண்டும் கண்டுபிடிக்கவில்லை. 
 
காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் கொலை வழக்கில் 9 மாதம் ஆகியும் குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை.திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும், 14 தனி படைகள் அமைத்தும் கண்டுபிடிக்கவில்லை. தமிழக போலீசார் திறமையற்று இருக்கிறார்கள்.
 
கள்ளக்குறிச்சி அருகே ஒரு பெண், பால் விற்பனை செய்துவிட்டு திரும்பும்போது, கொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை. காவல்துறை பல குழுக்கள் கொண்டுள்ளன. அதிராக மையங்களை வைத்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
 
முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். டாஸ்மாக் சந்து, பொந்து கடைகளை மூட வேண்டும் 4,829 அதிகார கடைகள் உள்ளது. சந்து கடைகள் எங்கு உள்ளது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும். இந்த கடைகளை மூட வேண்டும். அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.க
 
ட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறைக்கும் மாமூல் தருகின்றனர். மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும், மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்காத வகையில் சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையெனில் பா.ம.க. முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.மெத்த பெட்டமைன், கஞ்சா, அபின், போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை மது இல்லா மாநிலமாக மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது அரசு. இளைஞர்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. 
 
தவறுகளும், தோல்விகளையும் மறைக்க தங்களது தோல்விகளை மறைக்க போராட்டம் நடத்தப்படும் கட்சிகள் மீது அடக்குமுறை கையில் எடுத்து வருகிறது. போராட்டம் செய்யக்கூடாது என்று கைது செய்யப்படுகின்றனர்.தி.மு.க. ஆட்சியின் இந்த அடக்குமுறை இந்த ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறது. எதிர்க்கட்சியை அடக்குவது மூலம் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்கிறது. தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. சட்ட பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் தோல்வியை சந்திக்கும். 
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளை.. தாரை வார்க்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்