Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

கடனை திரும்பிக் கேட்பதா? சிஸ்டத்த மாத்துங்க மைலார்ட் : ரஜினியை கலாய்த்த ராமதாஸ்

Advertiesment
கடனை திரும்பிக் கேட்பதா? சிஸ்டத்த மாத்துங்க மைலார்ட் : ரஜினியை கலாய்த்த ராமதாஸ்
, வியாழன், 5 ஜூலை 2018 (16:22 IST)
கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு எதிராக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதை கிண்டலடித்தார்.

 
கோச்சடையான் படத்திற்காக ஆட் பியூரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கெடு விதித்தும் லதா ரஜினிகாந்த்  கடன் பாக்கியை செலுத்தவில்லை. 
 
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் கடன் பாக்கியை ஏன் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூலை 10ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், லதா ரஜினிகாந்த் விசாரணையை சந்திக்க நேரிடும்  என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்க்கை விடுத்துள்ளது.
webdunia

 
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “கொடுத்தக் கடனை திரும்பக் கேட்பது என்ன கலாச்சாரம். சிஸ்டத்தை மாத்துங்க மைலார்ட்!” என கிண்டலாக ஒரு டிவிட் போட்டிருந்தார்.
 
இதைக்கண்டு பொங்கியெழுந்த ரஜினி ரசிகர்கள், பாமக மற்றும் ராமதாஸுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மான் பட நடிகை