திமுகவில் இணைந்தார் டாக்டர் மகேந்திரன்: முக்கிய பதவி வழங்கப்படுமா?

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (18:54 IST)
திமுகவில் இணைந்தார் டாக்டர் மகேந்திரன்: முக்கிய பதவி வழங்கப்படுமா?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலகிய டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை டாக்டர் மகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுகவில் சேர இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்
 
அதனை அடுத்து சற்று முன்னர் அவர் திமுகவில் அதிகாரபூர்வமாக இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் திமுக தலைவரும் முதல்வருமான முதலமைச்சருமான முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் மகேந்திரன் திமுகவுக்கு இணைந்ததால் கோவை பகுதியில் திமுகவுக்கு வலிமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments