திடீரென கூட்டணி மாறும் டாக்டர் கிருஷ்ணசாமி? என்ன காரணம்?

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (15:02 IST)
பாஜக தலைமையில அமையும் கூட்டணியில் தான் புதிய தமிழகம் கட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென அதிமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த முறையாவது தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆக வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார். 
 
ஆனால் பாஜகவுடன் சேர்ந்தால் வெற்றி பெறுவது கஷ்டம் என்றும் அதிமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி சமீபத்தில்  தேவேந்திர குல வேளாளர் சமூக விவசாயிகள் இருவரை இழிவு படுத்துவகையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரமும் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் பிரதமர் திருச்சி வந்த போது அவரை சந்திக்க விரும்புவதாக கூறிய போதிலும் கிருஷ்ணசாமி சந்திக்க வில்லை என்றும் இதனை அடுத்து அவர் மறைமுகமாக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இல்லை என்பதை சொல்லிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments