Publish Date: Fri, 29 Dec 2023 (07:26 IST)
Updated Date: Fri, 29 Dec 2023 (07:27 IST)
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இருமல் காய்ச்சல் இருப்பதை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்ட டாக்டர். கிருஷ்ணசாமி நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது