Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோசை, ஊத்தாப்பம் தராத டெலிவரி நிறுவனம் மீது வழக்கு! 15 ஆயிரம் அபராதம் விதிப்பு!

Advertiesment
Kambu Dosai

Prasanth Karthick

, ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (18:26 IST)

திருவள்ளூரில் ஆர்டர் செய்த உணவை தராத உணவு டெலிவரி நிறுவனம் மீது வாடிக்கையாளர் தொடர்ந்த புகாரில் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

நாடு முழுவதும் ஏராளமான உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், உணவு டெலிவரி ஆப் மூலமாக உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலசமயம் இவ்வாறாக செய்யப்படும் உணவு ஆர்டர்கள் தாமதமாக வருவது, ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவு வருவது போன்ற பிரச்சினைகளும் அவ்வபோது நடக்கிறது.

 

சமீபத்தில் திருவள்ளூரஒ சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் அங்குள்ள உணவகம் ஒன்றில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலமாக தோசையும், ஊத்தாப்பமும் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு டெலிவரி பாய் கொடுத்த பார்சலில் தோசை, ஊத்தாப்பம் இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் உணவு டெலிவரி நிறுவன வாடிக்கையாளர் புகார் எண்ணில் புகாரளித்த போதும் அவருக்கு சரியான பதிலோ, பணத்தை திரும்ப அளிக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்தில் ஆனந்த் சேகர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை தொடர்ந்து அந்த உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்பந்து போட்டியில் தோற்றதால் ஆத்திரம்.. மாணவர்களை எட்டி உதைத்த பி.டி சார்! - பாய்ந்தது நடவடிக்கை!