விவசாயிகள் போராட்டத்தை நசுக்க பார்க்கும் பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்க வேண்டாம் என விவசாயிகளுக்கு நடிகருக்கு கிஷோர் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை ஒடுக்க ஹரியானா அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் முடித்து நடிகர் கிஷோர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் பேரணியை டெல்லிக்கு நுழைய விடாமல் தடுத்து வரும் காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தார்
அதன் பின்னர் பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளருக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். நமது விவசாயிகள் என்ன தேச விரோதிகளா? அவர்களுக்கு போராட உரிமை இல்லையா? என நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.