நான் முழு உடல் நலத்தோடு இருக்கிறேன். தேவையற்ற பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைரமுத்து மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் வீணான தகவல்களை வெளியிடப்பட்டன.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “’வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.
பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கு என் வணக்கம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.