Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Senthil Velan
புதன், 24 ஏப்ரல் 2024 (17:11 IST)
பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
நான் ராஜ்நாத் சிங்கிடம் கேட்க விரும்புகிறேன், சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் தருமென, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அந்த அறிக்கையைப் படித்தீர்கள்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ: பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு.! வேலையில்லா திண்டாட்டம்..! பிரியங்கா காந்தி விமர்சனம்..!!
 
ராஜ்நாத் சிங் கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments