கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனரால் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட 10 முன்மொழிவுகள் மீண்டும் சட்டசபையில் முழு மனதோடு நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியது ஆளுநருக்கு அவமானகரமானது இதன் மூலம் ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதை காட்டுகிறது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்.
வரும் டிசம்பர் 6ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவதை ஒட்டி விடுதலை பெற்ற நாளுக்கு முன்னர் எந்தெந்த இடத்தில் எந்தெந்த ஆலயங்கள் மசூதிகள் இருந்ததோ அவை அப்படியே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மீனவர் தினத்தை ஒட்டி தமிழக அரசு மீனவர்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.