மதத்தின் பெயரால் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் - ஜக்கி வாசுதேவ்

வியாழன், 2 ஏப்ரல் 2020 (21:09 IST)
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது மதத்தை வைத்து தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா வைரஸ் நம் சமூகத்தில் உள்ளவர்களின் மதத்தினால் பரவுகிறது என தவறான செய்தியை பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸிற்கு எதிராக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் …டுவீட்டுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி!