உடல் நலக்குறைவால் அவதிப்படும் நாய்களுக்கு, கால்நடைகளுக்கான ரத்த வங்கியில் ரத்த தானம் செய்யும் நாய்கள்.
மனித இனம் ரத்த தானம் செய்து வருவது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் சென்னையில் உள்ள வேப்பேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட்டது.
இந்த ரத்த வங்கியில் சென்னை பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முன்பதிவு செய்யப்பட்டு, ரத்தம் கொடுத்து வருகின்றன. அதில் 17 நாய்கள் தொடர்ந்து அடிக்கடி ரத்தம் கொடுத்து அண்மையில் சாதனை படைத்துள்ளன.
இந்த ரத்த தானம் வங்கி ஆண்டுதோறும் 100க்கு மேற்பட்ட தடவை ரத்த தானம் பெறுவது குறிப்பிடத்தக்கது. தானம் செய்த ரத்தம், உடல் நலக்குறைவால் அவதிப்படும் நாய்களுக்கு பயன்படுகின்றன.
மேலும் ரத்த தானம் செய்து சாதனை படைத்த நாய்களுக்கு அந்த ரத்த வங்கி சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.