Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. அலறியடித்து ஓடிய சிறுமியால் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (08:24 IST)
புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் 17 வயதில் சிறுமிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது சில்மிஷம் செய்த டாக்டரால் சிறுமி அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை தனது பெற்றோரிடம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அப்போது சிறுமியை பார்த்ததும் சபலப்பட்ட டாக்டர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கி வருமாறு பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு சிறுமி இடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி அடித்துக் கொண்டு மருத்துவரிடம் இருந்து தப்பித்து மருத்துவமனைக்கு வெளியே ஓடிவந்துள்ளார். அந்த நேரத்தில் மருந்து வாங்க சென்ற பெற்றோர் திரும்பி வந்த நிலையில் , தனக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பெற்றோரிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்