Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடி கூட்டத்தில் மாம்பழ சின்னம்!.. கோபத்தில் பொங்கிய மருத்துவர் ராமதாஸ்!...

Advertiesment
ramadoss

Mahendran

, வெள்ளி, 23 ஜனவரி 2026 (13:46 IST)
கடந்த சில வருடங்களாகவே பாமக நிறுவனர் டாக்டர் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து  வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
தனது மகன் அன்புமணியை பற்றி பல மேடைகளிலும் பல புகார்களை சொன்னார் ராமதாஸ். அவனை நான் பெற்றதே தவறு.. அவனை மத்திய அமைச்சராகியது நான் செய்த முக்கிய தவறு.. அவன் தன் தாயே மதிக்கவில்லை.. நிர்வாகிகளை அரவணைத்து செல்வதில்லை.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. அவன் என் மார்பில் குத்திவிட்டான்’ என்றெல்லாம் பீலிங்காக பேசினார் ராமதாஸ்.

ஒரு பக்கம் பாமகவின் தலைவராக இருக்கும் அன்புமணியின் பதவிக் காலம் முடிந்து விட்டது.. இனிமேல் நான்தான் தலைவர் என்றெல்லாம் பேசினார் ராமதாஸ். ஆனால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார் அன்புமணி.. அப்போதே ‘இந்த முடிவை அன்புமணி எடுக்க முடியாது’ என சொன்னார் ராமதாஸ்.

இந்நிலையில் இன்று மதுராந்தகத்தில் மோடி தலைமையில் நடக்க உள்ள பொதுக் கூட்டத்தில் மாம்பழச்சின்னம் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி கூடத்தில் அதிகார துஷ்பிரயோகம்.. அனுமதி பெறாத மாம்பழச் சட்டத்தை பயன்படுத்துவது தவறு.. மேடையின் பின்னணியில் மாம்பழச் சின்னம் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. அனுமதி பெறாத தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்டத்தில் காட்சிப்படுத்துவது சட்ட விரோதம்.. மாம்பழ சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது..

இந்த சட்ட விரோத செயல்களை செய்வது பிரதமரின் பதவி மற்றும் ஜனநாயக மரபுக்கு அவமரியாதை.. அதிகாரப் பலத்தை பயன்படுத்தி சின்னத்தை அபகரிக்க நினைக்கும் செயலுக்கு நடவடிக்கை எடுக்கும் வேண்டும்.. அரசியல் அறம் அற்ற இந்த செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக கூட்டணிக்கு போகாமல் விஜயை தடுத்தது அவரா?!.. கோபத்தில் டெல்லி!....