கோவை மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய மூவர் ஏற்படுத்திய விபத்தால் தன் மனைவியை இழந்துள்ளார் மருத்துவர் ரமேஷ். மருத்துவர்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டிப் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ரமேஷை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவர். ஏனென்றால் இவர் மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு சேவையாக செய்பவர். நேற்று முன் தினம் இவரது மனைவி மற்றும் மகள் சகுந்தலா இருவரும் பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது ஆனைக்கட்டி பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டுமூழ் போதையில் வந்த நபர்கள் இவர்கள் வாகனத்தின் மேல் மோதியதில் ரமேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரத்யு மகள் சகுந்தலா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர் ரமேஷ் தன் மனைவியின் பிணத்தோடு அந்த இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூட சொல்லி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரோடு பொதுமக்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டம் சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவ ஆரம்பித்தன. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டார் ரமேஷ்.
மக்களை போதைக்கு அடிமையாக்கி இதுபோல பல குடும்பங்களின் வாழ்க்கையில் விளையாடும் டாஸ்மாக் கடைகளை அரசு எப்போதுதான் மூடப்போகிறது எனத் தெரியவில்லை.