Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமார் இறந்தாரா என்பதைக்கூட சோதித்து பார்க்காத மருத்துவர்!: பகீர் தகவல்!

ராம்குமார் இறந்தாரா என்பதைக்கூட சோதித்து பார்க்காத மருத்துவர்!: பகீர் தகவல்!

ராம்குமார் இறந்தாரா என்பதைக்கூட சோதித்து பார்க்காத மருத்துவர்!: பகீர் தகவல்!
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:56 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இந்த மரணம் அவர் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதால் நடந்தது என சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


 
 
ஆனால் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழும்பி வரும் நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதரிடம் சில கேள்விகளை முன்வைத்தது. அதில் அவர் கூறிய ஒரு பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராம்குமாரைக் கொண்டுவந்தபோது நீங்கள் பார்த்தீர்களா? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர், பார்த்தேன். 4:45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் நவீன் சொன்னார். வரும் வழியில் துடிப்பு இருந்து என்றும், பாதி வழியில்தான் உயிரிழந்தார் என்றும் அவர், என்னிடம் தெரிவித்தார்.
 
அதனால், நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை. பின்னர், ரிஜிஸ்டரில் 5.45 மணி என பதிவுசெய்துவிட்டு மார்சுவரிக்கு அனுப்பிவைத்தோம். அப்படிப் பார்க்கும்போது ராம்குமார் 5 மணிக்கு உயிரிழந்திருக்கலாம். ராம்குமாரின் உடலைப் பார்த்தபோது அவரது இடது தோள்பட்டையில் சிராய்ப்பு இருந்தது. வாயிலும் காயம் இருந்தது என கூறினார்.
 
ராம்குமாரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும்போது உயிர் இருந்திருக்கிறது. வரும் வழியில் உயிர் பிரிந்தது என்று ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர் கூறியதை வைத்துக்கொண்டு ராம்குமாரை எப்படி மார்சுவரிக்கு அனுப்பினார்கள். அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா என சோதித்திருக்க வேண்டும் அல்லது அவரது மூச்சை திரும்ப பெறவைக்க முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாமே. இதில் ஏன் மருத்துவர் அலட்சியமாக இருந்தார் என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரையும் சுவாதியையும் பற்றி கருத்து சொன்ன நடிகர்!