Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்.-அண்ணாமலை

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (13:09 IST)
கோவை மாநகர் மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் மாநில துணை தலைவர் கனகசபாபதி இருவரும் மசக்காளி பாளையத்தில் பாஜக கொடியை ஏற்றச் சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற  தமிழக பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க  அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம்  தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments