Publish Date: Wed, 19 May 2021 (16:59 IST)
Updated Date: Wed, 19 May 2021 (17:01 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலை குறித்த வதந்தி எதையும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்திருக்கும் தகவலின் படி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததாகவும் அந்த பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது