Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலகத்தில் மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது

Webdunia
வியாழன், 24 மே 2018 (12:14 IST)
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தலைமை செயலகம் வந்த ஸ்டாலினுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைமைச்செயலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து சென்னை தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கைதுக்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments