Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதிப் பங்கீடு முடிஞ்சாச்சு… யாருக்கு எந்த தொகுதி ? –ஸ்டாலின் பதில் !

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (15:34 IST)
திமுக தலைமயில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து எந்த கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகள் என்ற விவரம் எப்போது வெளியிடப்படும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் முனைப்புக் காட்டியது திமுக. ஏற்கனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியதாக அறிவித்தது. அதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதையடுத்து மதிமுகவுக்கு 1 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் என ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லீம் லிக்கிற்கு ஒரு தொகுதியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் மொத்தமாகக் கூட்டணிக் கட்சிகளுக்கானத் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ள திமுக 20 தொகுதிகளில் தமிழகத்தில் போட்டியிடுகிறது. மேலும் எந்தந்த கட்சிகளுக்கு எந்தந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments