Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனைத் தொகுதிகள் ? எந்தெந்த தொகுதிகள் ?- இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு !

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (16:37 IST)
அதிமுக அணியில் உள்ள கட்சிகளின் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் தொகுதி குறித்த விவரம் அறிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக- அடங்கியக் கூட்டணி அமைந்துள்ளது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது. ஆனால் அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவை அணியில் இணைப்பது குறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதற்குக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட சிலக் கட்சிகளின் தலைவர்களின் அழுத்தமேக் காரணமாகக் கூறப்படுகிறது.

திமுக அணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கூட்டணி விவரங்களை அறிவித்துவிட்டாலும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நேற்று கூட்டணியை அறிவித்த அதிமுக அணி நேற்றே தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்து விட்டது.

அதையடுத்து காங்கிரஸ்ஸும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் அவசரம் காட்டவே இன்று மாலை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களை அறிவிக்க இருக்கிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவு செய்து அறிவிப்பர் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments