Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக மூத்த தலைவரின் மருமகன் கொடூரக் கொலை

Advertiesment
DMK
தமிழகத்தில் தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மாவட்டம் மதுரை ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் மருமகன் எம்.எஸ். பாண்டியன் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமிக்கும் அதிமுகவின் முன்னாள் மண்டல் தலைவர்  ராஜபாண்டியனுக்கும் பகை இருந்ததாகக் கூறப்படுகிறது,
 
இந்நிலையில் இன்று மதுரை புனித ஜோசப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த எம்.எஸ். பாண்டியனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
ராஜ பாண்டினுடைய ஆட்கள் தான் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டோ வெளியிட்ட சின்மயி... பங்கமாய் கலாய்த்த இயக்குநர்