திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பதால் திமுகவிற்கு நடுக்கம்..! - ஜெயக்குமார் கருத்து!

Prasanth Karthick
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:13 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில் அதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

இன்று அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வணங்கினார். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட திமுகவிற்கு தகுதி இல்லை. தமிழ்நாட்டை உலக அளவில் தலை நிமிர செய்தவர் அண்ணா. கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அண்ணா பெயரை ஒரு திட்டத்திற்கு கூட வைக்கவில்லை. அண்ணாவை மறந்து கருணாநிதியின் புகழ் பாடுகிறது திமுக.

 

அண்ணாவின் கொள்கைகளை மறந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளை இயக்கமாக செயல்பட்டுவருகிறது திமுக.

 

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளன. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பது போல பேசி இருப்பது திமுகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு எங்கள் தலைமையை நேரடியாக சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments