கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் நல்லாட்சியாக அமையாது: செல்லூர் ராஜூ

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:10 IST)
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் அது நல்லாட்சியாக அமையாது என்றும் திராவிட கட்சியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தனது சமூக வலைதளத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பேசிய பழைய வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதன் பின் ஒரு சில நிமிடங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்ட நிலையில் அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 
 
இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே வீடியோவை திருமாவளவன் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பினர். 
 
இந்த நிலையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய போது ‘தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் நல்லாட்சியாக அமையாது என்றும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய நிலையில் தற்போது செல்லூர் ராஜு அவர்கள் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments