Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடாமல் நின்று கொண்டிருந்த ரயிலை மறித்து சாதனை செய்த திமுக!

ஓடாமல் நின்று கொண்டிருந்த ரயிலை மறித்து சாதனை செய்த திமுக!

Advertiesment
ஓடாமல் நின்று கொண்டிருந்த ரயிலை மறித்து சாதனை செய்த திமுக!
, வெள்ளி, 20 ஜனவரி 2017 (16:13 IST)
தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


 
 
அதன்படி திமுகவினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அதே நேரம் ஜோலார்பேட்டையில் திமுகவினர் நின்றுகொண்டிருந்த ரயிலை மறித்ததால் சமூக வலைதளங்களில் இந்த போராட்டத்தை கிண்டலடித்து வருகின்றனர். இன்று காலை 4 மணியிலிருந்து Loof line-ல் ஓய்வெடுத்து கொண்டிருந்த சரக்கு ரயில் வண்டியை திமுகவினர் மறித்துள்ளனர்.
 
அந்த சரக்கு ரயிலில் டிரைவரே இல்லாமல் அது ஓய்வில் நின்ற ரயில் என்பதால் திமுகவினரை சமூக வலைதளத்தில் விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!