Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும் –களமிறங்கும் ஸ்டாலின்?

Advertiesment
ஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும் –களமிறங்கும் ஸ்டாலின்?
, சனி, 17 நவம்பர் 2018 (19:37 IST)
ஆளும்கட்சியின் செய்தி சேனலாக நியூஸ் ஜெ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே திமுக வும் தங்கள் கட்சிக்கான சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அதிமுக வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிமுக இரண்டானது. அப்போது ஜெயா டீவி சசிகலா & டிடிவி தினகரன் கைகளுக்கு சென்றது. அதனால் அதிமுக தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட செய்தி மற்றும் நிகழ்வுகளை ஒளிப்பரப்ப முடியாமல் தினறி வந்தனர்.

அதனால் நேற்று முன் தினம் அதிமுக வுக்கென தனியான செய்தி சேனலை தொடங்கி வைத்தனர். நியூஸ் ஜெ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த சேனல் முதன் முதலாக ஜெயலலிதா சிலை திறப்பு விழாவை நேரலையாக ஒளிப்பரப்பியது.

அதிமுகவைப் போல திமுகவுக்கும் தனியான தொலைக்காட்சி சேனல் வேண்டும் என ஸ்டாலின் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே திமுக சார்பு சன் டிவியும் கலைஞர் டிவியும் இருக்கையில் எதற்காக புதிய சேனல் என குழம்ப வேண்டாம். சன் டிவி தற்போது திமுக சார்பு என்ற நிலையில் இருந்து விலகி உள்ளது என்பதற்கு அதன் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சர்கார் படமே சான்று. அதுபோலவே கலைஞர் டிவியிலும் முழு பங்குகளும் ஸ்டாலின் கைவசம் இல்லாததால் தன்னால் முழு ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் நினைப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

இதனால் விரைவில் திமுக வில் இருந்து ஒரு தொலைக்காட்சி சேனல் உருவாதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெயர் என்னவாக இருக்கும் சொல்லவா வேண்டும்… ஆம்.. அதேதான்… 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பளார் ! பளார் ! தாசில்தாரை அறைந்த எம்.எல்.ஏ.வின் கணவர்...